Tuesday, July 1, 2014

பெரிய தாதம்பாளையம் ஏரி : சீமைகருவேல மரம்

பெரிய தாதம்பாளையம் ஏரி , இது கரூர் - தாராபுரம் சாலையில் 11 வது Kilometeril உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு கிட்டத்தட்ட 300 acres.

 

இந்த ஏரியின் எல்லைகளாக பெரிய தாதம்பாளையம் , சின்ன தாதம்பாளையம் ,பள்ளமருதபட்டி, கொத்தம்பாளையம் உள்ளன.
இதன் பெரிய மதகு பெரிய தாதம்பாளையத்திலும்  , அவசர கால மதகு சின்ன  தாதம்பாளையத்திலும் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் வாய்க்கால் சின்னதாராபுரம் அருகே தொடங்கி  கொத்தம்பாளையம் அருகே முடிகிறது(30 Kilometers).
( Google Map)

 


15 வருடங்களுக்கு முன்பு வரை , மழை காலங்களில் இங்கு ஏராளமான கொக்கு, நாரை மட்டும் சில வெளிநாட்டுப் பறைவகளும் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்தன. இப்பொழுது எதுவுமே இங்கு வருவதில்லை. இந்த ஏரியில் படகில் மீன் பிடித்த காலமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


பெரிய மதகு  (photo)



( தூர்ந்த நிலையில் இன்று இருக்கும் பெரிய மதகு)


(எவ்வளவு நீர் ஏரியில் இருந்து வெளியேறுகிறது என்பதை அளக்கும் அளவுகோல், தூர்ந்த நிலையில் இன்று)


அவசர கால மதகு (photo)








( மிக உறுதியான கருங்கல் சுவர்,ஏரியின் கரைகள்.)



நீர் வரத்து வாய்க்கால் (photo)












( ஒரு காலத்தில் இங்கு தண்ணீர் வந்ததற்கான சான்று, இந்த ஆற்று மண், சுமார் 5-7 அடி வரை ஆற்று மண் நிரம்பி உள்ளது)..

ஏரியின் தோற்றம்(photo).





















20 வருடங்களுக்கு முன்பு  வரை இந்த ஏரியில்  தண்ணீர் தேங்கி சுற்று  வட்டார கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது.
இந்த மதகு நீர் பெரிய தாதம்பாளையம் ,கரூர் ராஜவாய்காலில்  சென்று  முடிகிறது. இதன் மூலம் 1000 கணக்கான acre விவசாய நிலங்களும், கரூர் வரையிலான  நிலத்தடி நீரும் நன்கு இருந்தன.

இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அமராவதி ஆற்றில் சின்ன தாராபுரம் அருகே தொடங்கி, வரும் வழியில் 50 க்கும் மேற்பட்ட குளங்களை
 நிரப்பி இறுதியில் இங்கு வந்து சேருகிறது. வரும் வழியில் உள்ள 30+ ஊர்களின் மழை நீர் வடிகாலாகவும் இது இருந்து வந்தது.
 

இதன் இப்போதைய நிலை, ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் மண் மூடியும், நில ஆக்கிரமப்பாலர்களால் அபகரிக்கப்பட்டும், தூர் வாரப்படாமலும் கிடக்கிறது. சில இடங்களில் இந்த வாய்க்காலின் தொடர்ச்சி அற்றுப்போயும் உள்ளது.

அத்துடன், இந்த ஏரியும் 100க் கணக்கான  வருடங்களாக  தூர் வாரப்படாமல், மறு  புணரமைப்பு பன்னாமலும் தூர்ந்து போய் உள்ளது.  இதனால் ஏரி  முழுவதும் சீமை கருவேல மரங்கள் முளைத்துக்கிடக்கிறது.

 இதனால் சுற்றுவட்டார  அளவில்  நிலத்தடி நீர் அதளாபாலத்துக்கு சென்று விட்டது.இதனால் கிணற்று நீர் மட்டமும் குறைந்து விட்டது.வறட்சி , கடுமையான வெப்பம் , மற்றும் குடிநீர் பற்றாக்குறை இங்கு தலை விரித்தாடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஏரி , ஃபாரெஸ்ட் கட்டுப்பாட்டுக்கு  கொண்டு வரப்பட்டு , சில பகுதிகளில் இந்த சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வேறு மரங்கள் நடப்பட்டன. இருந்தும் மழை இல்லாத காரணத்தால் அவை நான்கு வளரவில்லை, சில இடங்களில் அழிந்தும் போய்விட்டன.இதன் விதைகள் காற்றில் பரவி , விவசாய நிலம் முழுவதும் முளைத்து விடுகின்றன.


இந்த ஏரியை மீண்டும் சீரமைப்பதான் மூலம், கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கல் குடிநீர் வசதி பெறலாம், நிலத்தடி மட்டம் நன்கு உயரும், சின்ன தாரபுரம் முதல் கரூர் வரையிலான மானாவாரி நிலங்கள் பாசன வசதி பெரும்.


இந்த முயற்ச்சியை , எங்கள் ஊர் விவசாய நண்பர்கள் ஆக்கப் பூர்வமாக செய்கின்றாம். கலெக்டர் மட்டும் வீவசாய  அதிகாரீகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து உள்ளன. இதை பற்றி தினமலர் நாளிதழில் செய்தியும் வந்தது.ஆனால் இது வரை எந்த பயனும்   இல்லை .இயற்கை ஆர்வலர்கள் இதற்கு உதவுமாறு எங்கள் ஊர் மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.


குறிப்பு : இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். 
கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன.
எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது
தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது.
 

No comments:

Post a Comment